#Breaking :: ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை வக்கீல் நோட்டீஸ்..!! பழனிச்சாமியின் அடுத்த அதிரடி..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் பொதுக்குழு மூலம் நீக்கினர். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால் தற்பொழுது வரை அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லபடியாகும்.

அதன் அடிப்படையில் அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் கட்சியின் பெயர், கோடியை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. அதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK lawyer has sent notice to OPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->