அடுத்த ட்விஸ்ட்! அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மிஸ்ஸிங்! அப்போ ஓ.பி.எஸ்-பா.ஜ.க கூட்டணி? - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அடிப்படை உறுப்பினர் விட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியானது.

இதனால் அதிமுகவின் கொடி, சின்னம் எடப்பாடி பழனிச்சாமி வசமானது. இந்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் எனவும், அவர் சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கொடி, லெட்டர் பேட் மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை உள்ளது. 

இதற்கிடையே இன்று பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ் சாமிநாதன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது லெட்டர் பேடில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை, எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்களை நீக்கி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் அவர் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக தலைமையின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு கூட்டணி குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக தலைவர்களின் படங்கள் தனது லெட்டர் பேடிலிருந்து அதிமுக தலைவர்களின் புகைப்படத்தை நீக்கி உள்ளார். 

இதன் மூலம் பாஜக தலைமை ஆசிரியர் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் இணைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK leaders photos removed from OPS letter pad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->