அமைச்சர் ரகுபதியின் சொத்து குவிப்பு.. தோண்டி எடுத்த அதிமுக.. மாஜி எம்.எல்.ஏவின் தரமான பதிலடி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், பி.வி ரமணா, கே.சி வீரமணி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணை தூங்குவதற்கு ஆளுநர் இசைவு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தொடர்பான ஆவணங்கள் முழுமையாக அனுப்பவில்லை எனவும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் ஏதும் வரவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆளுநரின் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. கோப்புகளை பெற்றுக் கொண்டு, பெற்றதற்கான ஒப்புதலில் கையெழுத்தும் போட்டு விட்டு ஆவணங்கள் கிடைக்கவில்லை என கூறுவது ஆளுநர் மாளிகைக்கு அழகல்ல என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். 

இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக விமர்சனம் செய்துள்ளது. அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் "சட்ட அமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்கு ஒன்று Crl.A.613/15 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் வழக்கில் வேகம் காட்டும் ரகுபதி 8 வருடமாக நிலுவையிலுள்ள தனது வழக்கையும் வேகப்படுத்த முயலாதது ஏன்? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டாமா?" என விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK responds minister raghupathi comment on AIADMK ministers case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->