பாஜகவுக்கு கல்தா.. அதிமுகவுடன் கை கோர்க்கும் தேமுதிக!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 

திமுக தலைமையில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சு வார்த்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதிமுக நேற்று முன் தினம் தொகுதி பங்கிட்டு குழு, பிரச்சாரக் குழு ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனை முடிவில் அதிமுக தலைமை ஏற்றுக் கொண்டு இணையும் கட்சிகளுடன் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எனவும், கூட்டணிக்கு வராவிட்டாலும் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்க பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது.

அதே வேளையில் நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தமிழக முழுவதும் தேமுதிகவிற்கு அனுதாப அலைகள் வீசி வருகிறது. இதனால் தேமுதிக எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் இழுத்து விட வேண்டும் என பாஜக முயன்று வருகிறது.

ஆனால் பாஜகவுக்கு கல்தா கொடுத்த தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக உடனான கூட்டணியில் 5 மக்களவை‌ தொகுதிகளையும்,  ஒரு ராஜ்யசபா சீட்டையும் தேமுதிகவிற்கு கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு அதிமுக தரப்பு 3 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அந்த மூன்று தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதற்கு தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ளதால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் தற்போது அதிமுக தேர்தல் தொகுதி பங்கீடு குழு தேமுதிக மற்றும் பாமக தரப்புடன் இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்போது அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk started alliance discussion with Pmk dmdk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->