களமிறங்கி முக்கிய புள்ளி! ஆசிரியர்களை சந்தித்த பின்னணி என்ன? பரபரப்பான போராட்ட களம்! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை உலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இன்றுடன் 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதியம் முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவேற்ற உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு ஒரு நிலையில் 170 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்புமணி மகேஷ் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையானது தோல்வியில் முடிவடைந்ததால் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை பள்ளி கல்வித்துறை உலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சந்தித்தார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர இடைநிலை மற்றும் டெட் ஆசிரியர்களுக்கு அதிமுக சார்பில் ஆறுதல் கூறிய ஜெயக்குமார் ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது அதிமுகவும் ஆதரவளித்திருப்பது ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK supports teachers protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->