அஜித் வெற்றிக்கு திராவிட மாடல் தான் காரணமா? காரி துப்பிடுவேன் - அண்ணாமலை காட்டம்! - Seithipunal
Seithipunal


துபாயில் நடந்துவரும் கார் பந்தயத்தின் 24H சீரிஸ் நடிகர் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறை மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக இலைஞரணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தனது வாழ்த்தினை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது, உதயநிதியின் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "நாளை நடிகர் அஜித் F1 ரேஸில் துபாயில் டாய்லெட்டை பயன்படுத்தினால் கூட, உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்வார் என்றால், திராவிட மாடல் ஆட்சியால் தான் நடிகர் அஜித் துபாயில் டாய்லெட்டை பயன்படுத்துவதாக தெரிவிப்பார். 

இதனை நான் சொல்ல வேண்டிய கட்டாயம். வேறு வழி இல்லை எனக்கு. அந்த மனிதன் (நடிகர் அஜித்) எந்த ஒரு காட்பாதரும் இல்லாமல் சினிமாவில் நடித்து மிகப்பெரிய நடிகராக வந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை போல முட்டுக் கொடுப்பதற்கு ஒரு சந்தானமும், தயாரிப்பதற்கு பின்னாடி ஸ்டாலின் ஐயாவோ நடிகர் அஜித்துக்கு இருந்தார்களா? என்றால், இல்லை. 

சந்தானத்தின் காமெடியை வைத்து தான் உதயநிதி படத்தை ஓட்டினார்கள். ஆனால் தனி மனிதனாக நடிகர் அஜித் உச்சத்தில் இருக்கும் போது பிரேக் எடுத்து, அவருடைய ஃபேஷனை பாலோ செய்கிறார். அதிலும் மூன்றாவது இடத்தில் அவருடைய அணியை கொண்டு வந்துள்ளார். இதற்கு திராவிடம் மாடல் என்று சொன்னால்... என் முன்னே மைக் இருக்கிறது.. இங்கே நான் காரி துப்ப முடியாது. வெளியே சென்று காரி துப்புகிறேன்" என்று காட்டமான விமர்சனத்தை பதிலடியாக கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajithkumar car Race Dravida model DMK Udhay BJP Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->