நாகாலாந்து NCP எம்.எல்.ஏக்களின் பரபரப்பு கடிதம்! சரத் பவாருக்கு கடும் நெருக்கடி! குஷியில் அஜித் பவார்!! - Seithipunal
Seithipunal


தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்தார். இதனை தொடர்ந்து அஜித் பவாருக்கு மகராஷ்டிரா மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும் அவருடைய ஆதரவாளர்கள் 8 பேருக்கு மகாராஷ்டிரா மாநில கேபினட்டில் அமைச்சராக பதவி ஏற்று கொண்டனர்.

மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அனைவரையும் நீக்குவதாக சரத் பவர் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்களுக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களுக்கு சொந்தம் எனவும் அஜித் பவர் உரிமை கோரினார்.

இதற்கிடையே அஜித் பவார் ஆதரவு எம்எல்ஏக்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தனர்.இதனால் மகாராஷ்டிரா அரசியலில் மீது மீண்டும் பரபரப்பு தொற்றுக் கொண்டது.

இந்த நிலையில் நாகலாந்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸுக்கு 7 எம்எல்ஏக்களும் உள்ள நிலையில் கட்சியின் ஒப்புதலோடு அவர்கள் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் எதிரொலியாக நாகாலாந்தில் உள்ள 7 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாரின் கை ஓங்கத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பு முழு கட்சியையும் அஜித் பவார் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All NCP MLAs in Nagaland sent letter support to Ajit Pawar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->