அனைத்து கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு.!
ALL PARTY MEET CENTRAL GOVT JULY 2022
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுவே பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கடைசிக் கூட்டமாகும்.
மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வருகின்ற 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மழைக்காலக் கூட்டத்தொடர் காலங்களிலேயே பதவி ஏற்பார்கள்.
English Summary
ALL PARTY MEET CENTRAL GOVT JULY 2022