எனது 2வது இன்னிங்ஸ் தொடங்குகிறது.."விரைவில் அரசியலுக்கு வருவேன்".. அம்பத்தி ராயுடு அறிவிப்பு.!!
Ambati Rayudu announced second innings in politics begins
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இடம்பிடித்த இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடியுள்ள அம்பத்தி ராயுடு சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடினார்.
கடந்த ஐபிஎல் சீசனோடு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த அம்பத்தி ராயுடு அரசியல் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராவதாக அவர் ஓய்வு பெற்றதில் இருந்து ஆந்திராவில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை பாராட்டியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து "எங்கள் முதல்வர் ஜெகன் ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார். மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் உங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
அம்பத்தி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெடியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அம்பத்தி ராயுடுவின் அரசியல் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதே மக்களுக்கும் சமுதாயத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என நினைப்பதாக அம்பத்தி ராயுடு பேட்டிகளில் கூறியிருந்தார்.
மேலும் அவரின் அரசியல் ஆர்வம் காரணமாக அவர் அரசியல் தொடர்பாக போடும் ட்வீட்டுகளும், அவரது நடவடிக்கைகளும் அரசியல் ரீதியாக விவாதத்திற்கு உள்ளாகியது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள முட்லூர் கிராம மக்களை சந்தித்த பின் அம்பத்தி ராயுடு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "ஆந்திர பிரதேச அரசியலில் எனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குகிறது. மக்களுக்கு சேவை செய்வதற்காக விரைவில் அரசியலுக்கு வருவேன். அதற்கு முன் மக்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் மாவட்டத்தையும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளேன்" என பேட்டி அளித்துள்ளார்.
English Summary
Ambati Rayudu announced second innings in politics begins