அரசியலில் குதித்த அம்பதி ராயுடு.!! மக்களவை தேர்தலில் போட்டியிட திட்டமா? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணிக்காக 2013 – 2019 காலகட்டத்தில் விளையாடிய அம்பதி ராயுடு ஐபிஎல் தொடர்ட்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு 2018ம் ஆண்டு முதல் ஓய்வு அறிவிக்கும் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.

ஆந்திராவை சேர்ந்தவரான அம்பதி ராயுடு அங்கு ஆளும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியாழ் ஈர்க்கப்பட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய கூடும் தகவல்கள் சில மாதங்களாக வலம் வந்து கொண்டு இருந்தது. அவ்வாறே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார் அம்பதி ராயுடு. விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அம்பாதி ராயுடு தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ambati rayudu joined ysr congress lok sabha elections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->