அம்பேத்கர் சிலைக்கு காவி உடை சர்ச்சை விவகாரம்.. அர்ஜுன் சம்பத் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்.! - Seithipunal
Seithipunal


இன்று சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்தார். கல்வி மறுக்கப்பட்ட போதிலும் தடைகளை தாண்டி உயர் கல்வி கற்று இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்.

மேலும், இந்து மதத்தை விட்டு வெளியேறி 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பல லட்சம் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுடன் பௌத்த மதத்தை தழுவினார்.

இந்த நிலையில் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் அம்பேத்கரை காவி(ய) தலைவன் என பட்டம் வழங்கியதுடன் காவி சட்டை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமம் என அம்பேத்கர் படத்தை சித்தரித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்து மக்கள் கட்சியின் இந்த சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து கும்பகோணம் நகரத்தில் பல பகுதிகளில் அம்பேத்கரை சித்தரித்து ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது. மேலும் இந்து மக்கள் கட்சியின் அம்பேத்கரை இழிவுபடுத்தும் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்து போஸ்டர் ஒட்டிய புகாரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த குருமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சர்ச்சை விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன், விபூதி மற்றும் குங்குமம் பூச மாட்டேன், எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டேன் என உயர் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்தார்.

இதன்பின், உத்தரவாதத்தை ஏற்று அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த அர்ஜூன் சம்பத்துக்கு பாதுகாப்பு வழங்க சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambedkar poster controversy Arjun sambath warranty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->