#BREAKING : அம்பேத்கரை அவமதித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 6ம் தேதி சட்ட மேதை . அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

அந்த போஸ்டரில் அம்பேத்கரை காவி(ய) தலைவன் என பட்டம் வழங்கியதுடன் காவி சட்டை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமம் என அம்பேத்கர் படத்தை சித்தரித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்து மக்கள் கட்சியின் இந்த சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து கும்பகோணம் நகரத்தில் பல பகுதிகளில் அம்பேத்கரை சித்தரித்து ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது. மேலும் இந்து மக்கள் கட்சியின் அம்பேத்கரை இழிவுபடுத்தும் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

 

இதனையடுத்து அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்து போஸ்டர் ஒட்டிய புகாரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த குருமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து கும்பகோணம் கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambedkar poster issue Gurumoorthy filed kundas case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->