இந்திய மக்களுக்கு அமெரிக்கா பாராட்டு!
America Wishes to Indian Peoples
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து ஜூன் 4ம் தேதியான நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளுக்கு மேல் வென்று முன்னணியில் இருக்கிறது. ஆனால் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது.
இதில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள மக்களுக்கு நன்றி என்று பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மாத்யூ மில்லர் இந்திய மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இதுபோன்ற ஒரு 100 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு மாபெரும் தேர்தல் பணியை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அரசாங்கத்தையும், இந்திய மக்களையும் அமெரிக்கா சார்பாக பாராட்டுகிறோம். மேலும் இந்திய மக்களின் இறுதி முடிவிற்காக நாங்களும் ஆர்வமாக காத்திருக்கிறோம் " என்று கூறியுள்ளார்.
English Summary
America Wishes to Indian Peoples