அதிரடியில் அமித் ஷா!!! அடுத்த ஆண்டு மார்ச் 31-குள் நக்சலிசம் அறவே ஒழிக்கப்படும்....!
Amit Shah action Naxalism completely eradicated March 31st next year
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இந்த மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர் பல நக்சலைட்டுகளை சுட்டுக்கொலை செய்தனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
ஆதில் அவர் கூறியதாவது, "நக்சல் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம். நாட்டில் தீவிரவாதத்தால் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 12இல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.
பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.2026 மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலிஸம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் " எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல்வாதிகளிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
English Summary
Amit Shah action Naxalism completely eradicated March 31st next year