அதிரடி கண்காணிப்பு! கன்னியாகுமரிக்கு அமித்ஷா வரவிருப்பதால் பாதுகாப்புக்காக ஐ. ஜி சரவணன்... - Seithipunal
Seithipunal


சி.ஐ.எஸ்.எப் மத்திய தொழில் பாதுகாப்புப்படை உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்யச் சோழன் ஆர்.டி.சி.மையத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி இந்தப் பேரணியை தொடங்கி வைத்தார்.

சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்:

மேலும் இது "சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்" எனப்படும் பாதுகாப்பான கடல் வளம் செழிப்பான இந்தியா என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும்.இந்தியாவின் கடற்பாதி பகுதிகளில் நடக்கும் சட்ட விரோதக் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும் .

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா:

இதில் வடக்கு, தெற்கு 2 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பேரணி நடந்து வருகிறது. இது 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கடந்து மொத்தம் உள்ள 6,553 கிலோ மீட்டர் தூரம் பயணித்துக் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் வருகிற 31-ந்தேதி நிறைவு செய்கின்றனர்.

இந்தப் பேரணியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா 31-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார்.

பாதுகாப்பு சோதனை:

இதில் அமித் ஷா வருகைக்காகப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் சோதனைக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) தென் மண்டல ஐ.ஜி. சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

.ஆய்வின்போது கூடங்குளம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படைக் கமாண்டர் மாங்கா சவுத்ரி, உதவி கமாண்டர் அசீம் பரத்வாஜ், ஆய்வாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah coming to Kanyakumari IG Saravanan has been appointed for security Vigilance


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->