வார்த்தையை விடாதீங்க! அண்ணாமலை தான் தலைவர் - தமிழிசைக்கு டோஸ் விட்ட அமித்ஷா?!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுள்ளார். இந்த ஏற்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வணக்கம் வைத்தார்.

அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அழைத்த அமித்ஷா, அவரை கண்டிப்பது போல கையின் நான்கு விரலை மடக்கி, ஒரு விரலை நீட்டி கண்டிப்பதுபோல் எதையோ சொல்லும் காணொளி வைரலாகி வருகிறது.

நீங்கள் செய்தது தவறு என்பது போலவும், இனிமேல் அதுபோல் செய்யக்கூடாது என்பது போலவும் தமிழிசையிடம் அமித்ஷா பேசிய காணொளி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் அண்ணாமலை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்து வந்த நிலையில், அது போல் இனி பேச வேண்டாம். நீங்கள் பேசியது தவறு, மாநில தலைவருக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். அவர் தான் தலைவர். கட்சிக்குள் மோதல் ஏற்படாமல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். 

வார்த்தைகளை கவனமாக பேசுங்கள், அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள் என்று அமித்ஷா தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து இருப்பார் என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த காணொளி தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த நிலையில், பொதுவான அரசியல் விமர்சகர்கள், அமித்ஷா பொது மேடையில் வைத்து முன்னாள் ஆளுநர் என்று பாராமல் இப்படி கண்டித்திருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah condemn to Tamilisai for Annamalai Issue TN BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->