அமமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறதா? இல்லையா?., சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்த டிடிவி தினகரன்.!
AMMK IN ELECTION 2022
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருக்கின்றனர் என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
"இப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டு வாரியாக திமுக வெற்றி பெற மக்கள் அனுமதித்தார்கள் என்றால்., ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று., திமுகவை வெற்றிபெற அனுமதித்தால்., மிகப்பெரிய அழிவில் முடியும்.
இதனை உணர்ந்து இந்த தேர்தலில் நல்லவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். காசுக்காக வாக்களிக்காமல், நல்ல வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நிச்சயமாக நல்ல வேட்பாளர்களை வாய்ப்பு தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட செய்திருக்கிறோம். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
கழக வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருக்கின்றனர். அனைத்தும் முடிந்த பிறகு எந்த எவ்வளவு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது என்பதை நாங்கள் வெளியிடலாம் என்று இருக்கிறோம்.
சில இடங்களில் வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலைமை உள்ளது. அதனால் அனைத்து இடங்களிலும் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக வேட்புமனுத்தாக்கல் முடிந்தவுடன் தமிழக அளவில் எத்தனை இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.