அமமுக இனி தேசிய கட்சியுடன் தான் கூட்டணி - டிடிவி தினகரன்.!
AMMK is now in alliance with the National Party TTV Dhinakaran
வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளில் ஒரு கட்சியுடன் தான் கூட்டணி என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று அவர்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
அதில் மிகவும் குறிப்பிடத்தக்கையில் கவனிக்கப்பட்ட கருத்து என்னவென்றால், அது அடுத்த தேர்தலுக்கான கூட்டணிதான். அதுவும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் ஆகும்.
வரப்போவது நாடாளுமன்ற தேர்தல், அதில் இரண்டு பெரிய கட்சிதான் இருக்கிறது. ஒன்று காங்கிரஸ், மற்றொன்று பாஜக. அதில் யாரேனும் ஒரு பிரதமர் வேட்பாளர் தான் ஜெயிக்கபோகிறார். நாம் மாநில கட்சி. நம்மிடம் இருந்து ஒரு பிரதமர் வேட்பாளரை நிறுத்த முடியாது.
ஆகவே, வர போகும், நாடாளுமன்றத் தேர்தலில், ஒன்று இரு தேசிய கட்சிளில் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் அமமுக தேர்தலை சந்திக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கு ஓர் அணில் போல உதவி செய்ய போகிறோம் என தனது கூட்டணி வியூகம் குறித்து மேடையில் தெரிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
English Summary
AMMK is now in alliance with the National Party TTV Dhinakaran