தொடர்ந்து 3வது நாளாக ப்ரஜ்வால் ரேவண்ணாவிடம் விசாரணை - சிறப்பு புலனாய்வுக்குழு தகவல்..!
An Investigation is undergoing on 3rd Day In Harassment Case on Prajwal Revanna
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி. வேட்பாளருமான ப்ரஜ்வால் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ஜெர்மனி தப்பியோடிய ரேவண்ணா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு திரும்பிய ப்ரஜ்வால்,பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மே 31ம் தேதி முதல் 6 நாட்களுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் காவலில் ப்ரஜ்வால் விசாரிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சிஐடி தலைமையகத்தில் விசாரிக்கப்பட்டு வரும் ப்ரஜ்வால், நேற்று முன்தினம் இரவு நடந்த விசாரணையில் முழுதாக ஒத்துழைக்கவில்லை என்றும், அதிகாரிகளை ப்ரஜ்வால் மிரட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் புகாரளித்த பெண் குறித்த கேள்விக்கு அப்பெண் யாரென்று தனக்கு தெரியவில்லை என்று ப்ரஜ்வால் கூறியுள்ளார். மேலும் இது ஒரு அரசியல் சதி. என் மேல் எந்த தவறும் இல்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு புகார் தந்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள ப்ரஜ்வாலை, குற்றம் நடந்ததாக கூறப்படும் ஹாசனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
English Summary
An Investigation is undergoing on 3rd Day In Harassment Case on Prajwal Revanna