ஈரோடு கிழக்கில் அரசு ஊழியர்கள் ஓட்டு எங்களுக்கு தான்... அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை..!! - Seithipunal
Seithipunal


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" என பேசினார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் "அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கிடைக்குமா..?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் "அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சனைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மற்றபடி பிற கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகள் சொன்னபடி திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓட்டுக்கள் திமுக கூட்டணிக்கு தான் கிடைக்கும்" என நம்பிக்கையுடன் பதில் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AnbilMahesh hopes Govt employees vote in Erode East is for dmk alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->