கடலூர் கலெக்டருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அன்புமணி! கலெக்டர் சிக்கியது எப்படி?   - Seithipunal
Seithipunal


என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.பாட்டாளியின் மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த விவகாரத்தில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மக்களின் பலத்த எதிர்ப்பும், பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டமும் என்.எல்.சி. நிர்வாகத்தினை தொடர்ந்து செயல்பட முடியாமல் முடக்கத்தில் வைத்திருக்கிறது.

இந்த நிலையில் மக்களுக்கு புரிய வைக்கும் விதமாக என்.எல்.சி. நிர்வாகம் தன்னுடைய விளக்கத்தை நாளிதழில் விளம்பரமாக தெரிவித்து இருக்கிறது. ஆனால் அந்த விளக்கத்தினை என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் வெளியிடாமல், மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்டிருப்பது தற்பொழுது சர்ச்சையாகி இருக்கிறது. 

இதனை சுட்டிக்காட்டிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விளம்பரம் செய்ததற்கான கட்டணத்தை, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்ததற்கு கண்டனமும் தெரிவித்து இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, "நிலப்பறிப்பு சர்ச்சை தொடர்பான என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி,  மக்கள் தொடர்பு அலுவலரே நாளிதழ் விளம்பரமாக (RO No.56/IPRO/Cuddalore/2023) வெளியிட்டிருக்கிறார். என்.எல்.சியின் விளம்பரத்தை அரசே வெளியிட்டது தவறு; கண்டிக்கத்தக்கது. 

என்.எல்.சியின் விளம்பரத்தில் உண்மை இல்லை. என்.எல்.சியின் போக்கில் மாற்றமும் இல்லை. மக்களை மதிக்காத என்.எல்.சிக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாகத் தான் மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும். ஆனால், மக்கள்விரோத நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தருவது நியாயமற்றது. 

என்.எல்.சியின் விளக்கத்தை அது தான் விளம்பரமாக அளித்திருக்க வேண்டும். அந்த நிறுவனத்திற்கென மக்கள்தொடர்பு பிரிவு இருக்கும் நிலையில், மாவட்ட மக்கள்தொடர்பு அலுவலர் மூலம் மக்கள்வரிப்பணத்தில்  விளம்பரம் வெளியிடச் செய்ய கடலூர் ஆட்சியர் என்.எல்.சியின் விளம்பர முகவர் அல்ல. 

தில்லி அரசு  விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததற்காக அம்மாநிலத்தின் ஆளும் கட்சியிடமிருந்து ரூ.163.62 கோடியை வசூலிக்க தில்லி அரசின் குழு ஆணையிட்டது. என்.எல்.சி விவகாரத்திலும் அது தான் நடந்துள்ளது; தில்லி நடவடிக்கை கடலூருக்கும் பொருந்தும். 

என்.எல்.சிக்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கடலூர் மாவட்ட  ஆட்சியரிடமிருந்து வசூலிக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani condemns Cuddalore collector for give advertisement behalf of NLC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->