திமுக உடன் கூட்டணியா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்புமணி ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் பங்கேற்றனர். இந்த  கூட்டத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பீகாரை போன்று தமிழகத்திலும் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "சமூக நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நீண்ட காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் கூட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம்.


பீகார் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டையும் அறிவித்துவிட்டார்கள். ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், சமூகநீதியின் கோட்டை தமிழ்நாடு, தந்தை பெரியாரின் வாரிசு நாங்கள் தான் என்று கூறி வரும் திமுகவினர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை, மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என முதலமைச்சர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினார்கள், இதற்கு அம்மாநில உயர்நீதி மன்றம் ஆதரவு அளித்தது. அதேபோல் உச்சநீதிமன்றமும் எந்த தடையும் விதிக்கவில்லை.

எனவே, தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது திமுகவுடன் கூட்டணியா? சிதம்பரத்தில் பாமக போட்டியா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சும்மா யாராவது எதாவது சொல்லுவார்கள், எங்களது நிலைப்பாடு குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாமகவின் நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் அறிவிப்போம். சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக ஆளும் கட்சியை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். இந்த சந்திப்பு என்பது சமூகநீதியை நிலைநாட்டவே தவிர கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அல்ல" என விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani explain pmk still undecided in alliance position


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->