" 108 ஆம்புலன்ஸ் " குறித்து அன்புமணி பெருமிதம்..ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பாமகவினர்.!! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களைக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்குசேகரிப்பு கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் இரண்டு வருவதை கவனித்த அன்புமணி  " நம்ம வண்டி ஆம்புலன்ஸ் வருது விடுங்கப்பா " என்று கூறினார். அன்புமணியின் இந்த பேச்சைக் கேட்டு ஆரவாரமான பாமகவினர் இரண்டு ஆம்லேன்ஸ்க்கு வழிவிட்டனர்.

பின்னர் அன்புமணி பேசியகையில், " இதுதான் திட்டம் தைரியமாக சொல்வேன் இந்தியாவுக்கே ஆம்புலன்ஸை கொண்டு வந்தவன் இந்த அன்புமணி. நான் கொண்டு வந்த இத்திட்டம் இந்தியாவில் 22 மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு பல கோடி உயிர்களை இதுவரை காப்பாற்றி உள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani is proud of Ambulance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->