நீங்க சமூகநீதி பேச வேண்டும்! குடிநீதி பேசக்கூடாது! அமைச்சர் முத்துசாமியை விளாசிய அன்புமணி!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் ஒண்டிபுதுரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி 90ML கொண்டு வருவது குறித்த பிரச்னையை நான் யாரிடம் சென்று பேசுவது? வீட்டில் தனியாக பேசிக்கொள்ளவா? காலையில் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது" என ஆவேசமாக பேசினார்.

மேலும் புதியதாக டாஸ்மாக் கடைக்கு வரும் இளைஞர்களுக்கும், இனிமேல் குடித்தால் அவ்வளவுதான் என்ற நிலையில் உள்ள முதியவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க உள்ளோம். அரசின் நடவடிக்கைகளை கேவலப்படுத்தாமல் ஆலோசனைகளை வழங்குங்கள் என அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள் விடுத்தார். மதுவிலக்கு துறை அமைச்சரின் இத்தகைய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுவிலக்கு துறை அமைச்சரின் இத்தகைய பேச்சுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும்; குடிநீதி பேசக் கூடாது! 

காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!

மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது.

நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?" என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani responded dmk minister comment on morning drunker


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->