பாலாற்றில் மேலும் ஒரு தடுப்பணை.. கோட்டை விட்ட தமிழக அரசு.. அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்.!!
Andhra govt construct new step dam in palar river
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை பாலாற்றில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கலை நாட்டுகிறார்.
கர்நாடகாவில் தொடங்கி ஆந்திரா வழியாக தமிழகத்தில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் பாலாறு தமிழகத்தின் வடமாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
ஆந்திராவில் ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியதால் வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் நாளை ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட சந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டை இருப்பதாக ஆந்திர மாநில அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டை இருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைக்கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்த சூழலில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு மேலும் ஒரு தடுப்பணை கட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Andhra govt construct new step dam in palar river