அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரியால் மலையே சரிந்துவிழும் அதிர்ச்சி வீடியோ.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் கல்குவாரியால் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. 

அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கல் குவாரி காரணமாக, அந்த மலையே சரிந்து விழுகின்றன வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெந்துரித்தி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரியில், ராட்சத எந்திரங்கள் மூலம் மலையின் ஒரு பகுதியில் கற்களை தோண்டி எடுக்க முயன்றபோது, அந்த மலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி கொண்டிருக்கிறது.

அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரியில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Quarry Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->