அண்ணா பல்கலை, வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரன் மீது பாய்ந்த குண்டாஸ்!
Anna University assault Gnanasekaran Gundaas Act
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு (SIT) தொடர்ந்து விசாரித்து வருகிறது. இன்று காலை SIT அதிகாரிகள் ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டு சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இதன்போது, அவரின் லேப்டாப் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரையை அடுத்து, சென்னை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே ஞானசேகரன் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இதற்கு முன்பு மூன்று முறை குண்டாஸ் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Anna University assault Gnanasekaran Gundaas Act