பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தாமே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இன்று இரண்டாவது நாள் விசாரணையின்போது, வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் மாணவியிடம் வசூலிக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை காவல் ஆணையர் அருண் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University Harassment case TNGOvt Madras High Court 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->