அண்ணாமலை - எடப்பாடி ஆவேச மோதல்.. ...அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கிய தமிழிசை!
Annamalai Edappadi furious conflict Advice given by Tamilisai
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தன்னைப் பொறுத்தவரை, தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும் என்றும், வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது என்று கூறினார்.
மேலும் சகோதரி விஜயதரணி பதவி கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இது இயல்புதான் என்றும், பாஜகவில் அனைவருக்கும் பதவி கிடைக்கும். சிறிது காலம் ஆகலாமே தவிர காலம் கடக்காது. அவர் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் துரை முருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த்பேசி, தி.மு.க.வில் ஒரு புயலை உருவாக்கி உள்ளார். பாவம் அண்ணன் துரை முருகன். கட்சியில் அவர் எவ்வளவு சீனியர். கட்சியில் கடுமையாக உழைத்த துரைமுருகன் உதயநிதிக்கு கீழ்படிந்து இருக்க வேண்டிய நிலை என்று விமர்சித்தார்.
English Summary
Annamalai Edappadi furious conflict Advice given by Tamilisai