ஆளுநரை சந்தித்தது ஏன்? அந்த அரசனுக்கு எதிரான அறிக்கையா? என்ன சொல்லுகிறார் அண்ணாமலை.!
ANNAMALAI MEET GOVERNOR RN RAVI FOR MARIDOSS ARREST
மாரியதாஸ் கைது விவகாரம் பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அனைத்தும் பயனளிக்கவில்லை என்று பாஜக கடும் அதிருப்தியில் உள்ளது.
இதற்கிடையே மரியதாஸ் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று 12:30 மணியளவில் ஆளுநர் ஆர் என் ரவியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 40 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் குண்டர் சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இந்த சந்திப்பு ஏன் என்பது குறித்து அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக ஆளுநர் மதிப்புக்குரிய திரு R.N. ரவி அவர்களை தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்களுடன் சென்று சந்தித்தேன்.
நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டு இருக்கும் திமுக அரசனுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்பித்தோம்!" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ANNAMALAI MEET GOVERNOR RN RAVI FOR MARIDOSS ARREST