ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர் மோடி.!! - அண்ணாமலை பெருமிதம்.!!
annamalai pride narendra modi did not steal
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூரில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பொதுமக்களிடையே பேசினார். அதில் "வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களிடம் நிதி திரட்டி, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக நிதி கொடுத்த 3வது மாநிலம் தமிழகம். இங்குதான் சனாதனத்தை ஒழிப்போம் என பேசுகிறார்கள். அந்த சனாதனத்தை மீட்டெடுக்கவே இந்த யாத்திரை. சாதியை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். அந்த சாதியை வைத்து திமுக அரசியல் செய்கிறது. இதை உடைக்க வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/annamalai0208-ktpsn.jpg)
திமுகவில் 35 அமைச்சர்களில் 11 பேர் மீது நீதிமன்றங்களில் ஊழல் வழக்கு உள்ளது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். தமிழகத்தில் இந்நாள் மற்றும் முன்னாள் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் 120 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியை கூட திருடாதவர்.
பாஜகவுக்கு 2014-ல் 283 எம்பி-க்களும், 2019-ல் 303 எம்பி-க்களும் கிடைத்தனர். வரப்போகும் 2024 தேர்தலில் 400 முதல் 450 எம்பி-க்கள் கிடைக்க வேண்டும். மோடி பிரதமராவதற்கு ஆதரவளிப்பதில் தமிழகம் தான் கடைசியில் இருந்தது. எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/BJP Modi e.jpg)
தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் கடன் வாங்குவதில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மீதும் ரூ.3.81 லட்சம் கடன் உள்ளது.
திமுக கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில், 20 மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றுவார், மோடி என்றால் கேரண்டி என்று அர்த்தம்" என பெருமிதமாக பேசியுள்ளார்.
English Summary
annamalai pride narendra modi did not steal