100 கோடி ரூபாய் வேணுமா? துபாய் குடும்பம்., திமுகவுக்கு அண்ணாமலை கொடுத்த பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வரின் துபாய் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல் நஷ்ட ஈடாக ரூ. 100 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று, திமுக சார்பில் இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், "100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். 

தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.

நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.  திமுகவின்  அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன்.

தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன்" என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai reply to r s bharathi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->