எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளரா? அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்!! - Seithipunal
Seithipunal


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை சிரிப்புதான் வருது என நக்கலாக  சிரித்தபடி தொடர்ந்து பேசியவர் பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான், ஏன் நான்காவது முறையாக கூட பிரதமர் மோடி வரலாம். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம்" என பதில் அளித்தார்.

மேலும் பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் தான் ஹீரோ என்பதை காட்டிக் கொள்ளவே முட்டையை கையில் எடுத்துள்ளார். அவர் செய்யும் அரசியல் சிறுபிள்ளைத்தனமானது. தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பராக வரவேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சியில் வர வேண்டும். பாஜகவில் யார் வேண்டுமானாலும் வளர தடை இல்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மட்டும் தான். பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார்" என ராஜேந்திர பாலாஜி பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to RajendraBalaji comments


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->