சமூக நீதியை பற்றி பேச "திமுகவுக்கு லாய்க்கு இல்லை".. வெளுத்து வாங்கிய அண்ணாமலை.!!
Annamalai said DMK is not qualified to talk about social justice
திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் மாநாட்டை பொருத்தவரை குடும்பத்திற்காக குடும்பத்தினர் நடத்திய மாநாடு. இயற்றிய தீர்மானத்தில் ஒன்றுக்கு கூட தகுதி இல்லை. திமுக தொண்டர்கள் நீட்டுக்கு எதிரான கையெழுத்திட்ட அஞ்சலட்டையை கூட சேலம் மாநாட்டில் தூக்கி எறிந்துவிட்டு சென்று விட்டார்கள்.
தமிழகத்தை திமுகவிடம் இருந்தும், திமுக குடும்பத்தினரின், அராஜகம் மற்றும் அடாடிவடியிடம் இருந்து மீட்பதுதான் பாஜகவின் கொள்கை. சிறுமியை துன்புறுத்தியதாக திமுக எம்எல்ஏ குடும்பத்தினரை ஏன் இதுவரையிலும் கைது செய்யவில்லை. இது போன்று தான் கடலூர் எம்பி ரமேஷ் மீதும் நடவடிக்கை இல்லை.
சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு லாய்க்கு இல்லை. ஒற்றைக் கட்சி ஆட்சியில் இருக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால் ஒற்றை குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் மக்கள் விருப்பம். இளைஞர் அணி மாநாடு என்பது நமத்துப்போன மிச்சர், அதை யாரும் சாப்பிடவில்லை. குப்பைக் கூடைகள் நிரம்பியது தான் திமுக இளைஞரணி மாநாட்டின் சாதனை' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Annamalai said DMK is not qualified to talk about social justice