காமராஜரை போன்று சமூக நீதியை காப்பவர் நரேந்திர மோடி! - அண்ணாமலை, பாஜக.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்த நாளையொட்டி மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "காமராஜர் தலைமையில் அமைந்த முதல் கேபினட் அமைச்சரவையில் சமூக நீதியை நிலைநாட்டியவர். அதுபோன்று சமூக நீதியை காப்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அரசியல் மாற்றம் வந்தால் சமுதாய மாற்றம் வந்துவிடும் என்பதற்குச் சான்று காமராஜரும் மோடியும் தான். 

காமராஜரின் ஆட்சியில் ஏற்பட்ட தொழில் புரட்சி போல் பிரதமர் மோடியின் ஆட்சியிலும் இந்தியாவில் பெரிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளது. காமராஜரின் ஆட்சிக்குப் பிறகு எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன என்று பார்த்தால் கேள்விக்குறி தான். அவருடைய ஆட்சி காலத்தில் இருந்த அமைச்சர்கள் போல் இன்று தமிழக அமைச்சர்கள் இருக்கிறார்களா? காமராஜர் ஆட்சி போல தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என விழா மேடையில் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said PMModi protector of social justice like Kamarajar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->