முதல்வர் ஸ்டாலினுக்கு, உறுதுணையாக பாஜக இருக்கும் - உறுதியளித்த அண்ணாமலை!
Annamalai SaY about Coimbatore Car Blast NIA
கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தின் பொது அமைதி, சட்டம்-ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை பாஜக வரவேற்கிறது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம். தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள்.
தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள்.
திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள்.
மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai SaY about Coimbatore Car Blast NIA