தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்தும் திமுக அரசு.. அண்ணாமலை குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


கடலூர், காரைக்குடி, கரூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மின்வெட்டிற்கு காரணம் மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.  இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும். தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

இந்நிலையில், திமுக அரசு செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதனால் மின் விநியோகம் தடைப்பட்டதாக தங்களது குடும்ப நாளிதழின் மூலம் கூறுவது சுத்தப் பொய். TTPSஇல் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று 5 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருந்தது; பற்றாக்குறை எங்கே? ஏப்ரல் 20ஆம் தேதி அன்று ஒரே நாளில் 4 யூனிட்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai tweet for power cut in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->