மளிகைக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு - கரூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன்பு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி சிகரெட் இல்லை என்று கூறியதால், அன்சாரி 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, மதுபாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசினார். இதில், கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகியது.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்ததால், முகமது அன்சாரி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerosene bomb attack on shop in karoor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->