2 நாட்களில் டிடிவியிடம் செல்லும் அதிமுக - இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன? எதிர்பார்ப்பில் அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த கணிப்பின் படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கபட்டது.

இதில், தமிழகத்தை பொறுத்தவரையில், இந்தியா கூட்டணியே 36 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கோவை தொகுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்று அரசியல் கட்சிகளிடையே போட்டாப்போட்டி நிலவிய நிலையில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வி அடைவார் என்றும், தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக தேனியில் போட்டியிடும் அமமுகவின் வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அந்த தொண்டர்கள் அண்ணன் டிடிவி தினகரன் பின் அணிவகுத்து நிற்கப்போகிறார்கள். 

இது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நடக்கத்தான் போகிறது என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை கூறியது போல அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லுமா செல்லாதா? அதற்கான முயற்சிகள் நடந்தால், எடப்பாடி பழனிசாமி எப்படி தடுத்து நிறுத்துவார் என்ற கலக்கத்தில் அதிமுக ஆதரவாளர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai waiting admk going to ttv


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->