எந்த நேரமும் பொய் .....அண்ணாமலையை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரையும் திமுக அழைக்கவில்லை என்றும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், மத்திய  தலைவர்களின் உதவி தேவை என்பதற்காக பாஜகவை திமுக அழைத்ததாக விமர்சித்தார்.

மேலும் கலைஞர்  நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்ததாக தெரிவித்த அவர், அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது. மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு நடத்தியதாக, முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக சாடினார். தொடர்ந்து பேசிய அவர், 
திமுகவை  குற்றம்சாட்டினால், பாஜக மாநில தலைவர் என்னை குறை கூறுகிறார்.  அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி எனச் சொல்கிறார்

10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு என எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளதாக குற்றம் சாட்டினார். 
se


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anytime lie Edappadi Palanichamy who bought Annamalai white


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->