ஜெ.வுக்கு சிகிச்சை கூடாது.. மருத்துவர்களுக்கு ஓவர் அழுத்தம்.? யார் அந்த ஆசாமி? ஆணையம் கொடுத்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016 இல் டிசம்பர் மாதத்தில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியான ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், பல்வேறு தெளிக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, சசிகலா, கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். 

Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal

மேலும், அந்த அறிக்கையில், "ஆஞ்சியோ செய்து கொள்வதற்காக ஜெயலலிதாவை ஷமீன் ஷர்மா சம்மதிக்க வைத்தார். ஆனால், அவருக்கு சிகிச்சை நடைபெறவில்லை. ஆஞ்சியோவுக்கு சம்மதிக்க வைத்த ஷமீன் ஷர்மா அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டவர். 

அவரை சசிகலாவின் உறவினர்கள் தான் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், யார் என்பது விசாரணையில் கூறப்படவில்லை. மருத்துவர்கள் Y.V.C ரெட்டி மற்றும் பாபு ஆப்ரஹாம் ஆகியோர் தான் அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவர்களை ஏற்பாடு செய்துள்ளனர். 

ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட சில அழுத்தத்தினால் சிகிச்சை செய்ய முடியாமல் காலம் தாழ்த்தபட்டது. அதற்குள் ஜெ.வின் உடல் மோசமாகியுள்ளது. இது குறித்து மேலும், விசாரிக்க வேண்டும். " என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

appollo docters getting pressued by someone to cure jayalalitha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->