முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கம்பளம் விரிப்பதை நிறுத்தி விட்டு, வாக்களித்த மக்களை பற்றி கொஞ்சம் சிந்திக்க துவங்குங்கள் - அறப்போர் இயக்கம்!
Arappor Iyakkam Condemn to DMK Minister Anbarasan puliyanthoppu kp park
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புளியந்தோப்பு KP Park கட்டிடங்களை தரமற்றதாக கட்டிய PST Empire நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்திருந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு கொஞ்சமாவது பயம் வந்திருக்கும். ஆனால் அறப்போர் கொடுத்த புகாரை திமுக அரசு சட்டை செய்யவே இல்லை.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் மீதே நடவடிக்கை எடுக்காத திமுக அரசு தங்கள் ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்களின் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் ஒப்பந்ததாரர்களை இப்படிப்பட்ட தரமற்ற கட்டிடங்களை கட்ட வைக்கிறது.
ஐயா அன்பரசன் அவர்களே, நீங்க தானே இந்த துறை அமைச்சர்..? இப்படி தொடர்ந்து உங்கள் துறையில் நடைபெறும் வேலைகள் மீது புகார்கள் குவிந்து கொண்டே இருப்பதை பார்த்து உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி ஏற்படாதா? இந்த பாமர மக்கள் படும் கஷ்டங்கள் உங்கள் கண்களில் படவே படாதா?
முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கம்பளம் விரிப்பதை நிறுத்தி விட்டு உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களை பற்றி கொஞ்சம் சிந்திக்க துவங்குங்கள்" என்று அமைச்சர் அன்பரசனுக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
Arappor Iyakkam Condemn to DMK Minister Anbarasan puliyanthoppu kp park