இது என்ன தகர டப்பா ஆட்சியா CM ஸ்டாலின்? உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மார்ச் 30 ஞாயிறு அன்று உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறப்போர் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்று முடிவடைந்துவிட்ட நிலையில், அரசியல் சாசனப்படி அதற்கு முன்பாக நடத்த வேண்டிய ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கிளையாக செயல்பட்டு வருகிறது. 

மத்தியல் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி ஆனால் உள்ளாட்சியில் மட்டும் பிரதிநிதிகளே இல்லாத தகர டப்பா ஆட்சியா ஸ்டாலின்?

28 மாவட்டங்களில்,கிராமப்புற உள்ளாட்சிகளில் 91,975 காலியிடங்கள் இருப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தண்ணீர், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளுக்குக் கூட அவர்கள் அல்லல்படும் நிலை பல இடங்களில் உள்ளது .இது குறித்து தன்னாட்சி அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பயணித்து உள்ளாட்சி பிரதிநிதி இல்லாததால் மக்கள் படும் பிரச்சனைகளை நேரடியாக கண்டறிந்துள்ளது.

தேர்தல்கள்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி.   எனவே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு அரசும் இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுத்து தேர்தல் நடத்த கோரி, தன்னாட்சி, அறப்போர் இயக்கம், Voice of People, IGG மற்றும் தோழன் ஆகிய அமைப்புகள் சார்பாக, அறவழி உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளோம். வரும் ஞாயிறு உங்கள் வேளைகளில் இதற்காக ஒரு சில நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளுங்கள். 

நாள்: 30.03.2025-ஞாயிறு
நேரம்: 9 AM முதல் 5 PM வரை
இடம்: இராஜரத்தினம் மைதானம் அருகில், எழும்பூர், சென்னை


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arappor Iyakkam Fasting protest announce DMK Govt Mk Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->