தற்காலிக நீக்கம் கட்சி கொடுத்த தண்டனை., கைது செய்வது எப்போது? முதல்வர் ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்கம் கேள்வி.! - Seithipunal
Seithipunal


போலீசாரை மிரட்டிய வீடியோ வெளியான நிலையில், திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : ராயபுரம் கிழக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை மூன்று பேர் சேர்ந்து மர்ம கும்பல் மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த காணொளி குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, போலீசாரை மிரட்டியது  திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் திமுகவில் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிய வந்தது.

அதன்படி, ராயபுரம் கிழக்குப் பகுதியின் 56வது வட்டத்தை சேர்ந்த ஜெகதீசன், திமுக நிர்வாகி என்பது தெரிய வரவே, சமூக வலைத்தளங்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில், திமுக பெண் கவுன்சிலர் கணவர் ஜெகதீசன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கட்சியை விட்டு நீக்கியது, கட்சி கொடுக்கும் தண்டனை. இதற்காக திமுகவிற்கு பாராட்டுக்கள்.

ஆனால், காவல் துறையை மிரட்டிய வழக்கில் சட்டப்படி இவரும், இவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அது எப்போது நடக்கும்? என்று தமிழக போலீசாருக்கும், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arappor iyakkam say about dmk jagatheesan issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->