தொகுதி மறு சீரமைப்பில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்; பிரதமர் மோடிக்கு, ஜெகன் ரெட்டி கடிதம்..!
Jagan Reddy letter to Prime Minister Modi should be amended so that no state is affected in the redelimitation of constituencies
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மறு வரையறை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
மோடிக்கு ஜெகன் மோகன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; தொகுதி மறுசீரமைப்பு என்பது சில மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. 1971-ஆம் ஆண்டு இருந்த தென் மாநிலங்களின் மக்கள் தொகை, 2011-இல் 04 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு தென் மாநிலங்கள் தேசிய முன்னுரிமை கொடுத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியதே காரணம்.

எனவே மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து விடும். எனவே, எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுகிறேன்.
நாட்டின் அரசியல், சமூக நல்லிணக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்ட விவகாரம் என்பதால், பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்; மாநிலங்களின் அச்சத்துக்கு முடிவு கட்ட வேண்டும். என்று அந்தகடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
English Summary
Jagan Reddy letter to Prime Minister Modi should be amended so that no state is affected in the redelimitation of constituencies