தொகுதி மறுசீரமைப்பு தொடர்பில் மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்தி, தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை; கேரளா முதல்வர்..! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன், 'தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்' என பேசினார்.

அத்துடன், இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும்,  எண்ணிக்கை மட்டுமல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தபட்ட விவகாரம் என்று கூறினார்.

மேலும், தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மாநிலங்களை ஒன்றிணைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த கூட்டத்தில் இருந்து தொகுதி மறுசீரமைப்புக்கான எதிர்ப்பு தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து, இக்குழு கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம் எனவும், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனை தான் தொகுதி மறுசீரமைப்பு எனவும் குறிப்பிட்டார். அத்துடன், டில்லியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,  டில்லியில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மேலும்,  பா.ஜ., நம்மை பேச அனுமதிப்பதில்லை என்றும், அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள் என்று தெரிவித்தார். அத்தோடு, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன் என்றும் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, மத்திய அரசின் நிதிப் பங்கீட்டிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  தமிழகத்தைப் போலவே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய பிற மாநிலங்களுக்கும் நிதிப்பங்கீட்டில் அநீதி இழைக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும்  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால் மத்திய அரசு விருப்பம் போல் சட்டங்களை நிறைவேற்றுகிறது என அவர் குற்றம் சுமத்தி பேசினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the duty of the central government to hold meaningful talks with the states regarding delimitation and clarify Kerala Chief Minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->