செந்தில்பாலாஜி மீது FIR பதியப்படுமா? வளைத்து வளைத்து சுத்துப்போடும் அறப்போர் இயக்கம்!
Arappor iyakkam say about DMK Senthilbalaji EB transformer scam case
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக அரசின் 400 கோடி Transformer ஊழல் தொடர்பாக அறப்போர் கொடுத்த புகாரில் FIR பதியப்படுமா? வழக்கு தொடுக்க உத்தரவிட கோரி அறப்போர் தொடுத்த வழக்கில் திமுக அரசு நீதிமன்றத்திற்கு பதில் அளிக்குமா?
டெண்டர் மூலம் போட்டியிட்ட அனைவரும் ஒரே விலைக்கு டெண்டர் கொடுத்தது எப்படி?
அவர்கள் கொடுத்த டெண்டர் தொகை சந்தை விலையை விட மிக அதிகமாக இருந்தது எப்படி?
சந்தை விலையை விட அதிகமாகவும், போட்டியிட்ட அனைவரும் ஒரே விலைக்கும், டெண்டர் கொடுத்திருந்தும் அதை ரத்து செய்யாமல் அனுமதித்தது எப்படி?
இந்த டெண்டர்களுக்கு பொறுப்பு அதிகாரியாக செயல்பட்ட, ஏற்கனவே முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்பட்ட தமிழக மின்துறை அதிகாரி காசி யாருடைய உத்தரவின் பெயரில் இந்த முறைகேடான டெண்டர்களை அனுமதித்தார்?
மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்வாரா? என்று கேவலி எழுப்பியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு - http://arappor.org/EB_Scam_400Crore
விரிவான வீடியோ - https://youtu.be/KqfXcR99rDQ
English Summary
Arappor iyakkam say about DMK Senthilbalaji EB transformer scam case