திமுக அமைச்சர்களின் 1,51,10,00,000.00 ரூபாய் ஊழல்! ஸ்டாலினின் இரும்பு கரம், கரும்பு சாப்பிடுதா? திராணி இல்லாத எதிர்க்கட்சிகள் - அறப்போர் இயக்கம் விளாசல்! - Seithipunal
Seithipunal


பழைய ஆட்சியை குறை சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய ஆட்சியிலும் அதே குறைகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது, இது போன்ற ஊழல்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கான அவருடைய சம்மதமாகவே கருத வேண்டி உள்ளது என்று அறப்போர் இயக்கம் விமர்சித்துள்ளது.

மேலும், மக்கள் பணம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் தன்னுடைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்திருப்பார். 

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு அமைச்சரிடம் இருந்து மீட்டு அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருப்பார். இந்த ஊழல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு துணை போன அரசு அதிகாரிகளை வழக்கு பதிந்து பணி நீக்கம் செய்திருப்பார். 

ஆனால் இவை எதையும் செய்யாமல் விடியல் விடியல் என்று ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 
 
திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து சில அரசியல் கட்சிகள் பெயரளவிற்கு அறிக்கை அளித்து விட்டு மறந்து விட்டனர். சிலர் அது குறித்து பேச கூட திராணி இல்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.  

Corruption கபடதாரிகள்  என்று வசனம் பேசினால் மட்டும் போதுமா? அந்த Corruption குறித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டாமா? பேசுவார்களா பார்க்கலாம் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் மின்சார வாரியத்தில் நடைபெற்ற transformer கொள்முதல் ஊழல் குறித்து விரிவாக அறிந்து கொள்ள:
Transformer Scam - http://arappor.org/EB_Scam_400Crore

துரைமுருகன் அமைச்சராக இருக்கும் கனிமவளத்துறையில் நடைபெற்ற 700 கோடி கல் குவாரி ஊழல் குறித்து விரிவாக அறிந்து கொள்ள:
புகார் விவரங்கள்: https://arappor.org/tirunelveli-mining/

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆக்கிரமித்துள்ள 411 கோடி மதிப்புள்ள 4.75 ஏக்கர் அரசு நிலம் குறித்த விவரங்களை பார்க்க: 
Complaint - https://arappor.org/govt-land-grabbing-st-thomas-mount
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor iyakkam say Corrupt DMK Govt Useless DVAC MK Stalin Govt Senthilbalaji


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->