#தமிழகம் || ஊராட்சி மன்ற தலைவரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற மர்ம கும்பல்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசபிள்ளைபட்டி ஊராட்சிமன்றத் தலைவர் சக்திவேல் (வயது 45). இவரின் உத்தரவு பேரில் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியானது.

அதில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் நீர் நிலை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதன்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அரசப்பிள்ளைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அனைவரும் உடனடியாக அதனை அகற்றிவிடவேண்டும் எனவும், ஒலிபெருக்கி மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்சினையில் ஒரு தரப்பினர் மட்டும் ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் இன்று இந்த பணியின் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சக்திவேல் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, நேற்று இரவு டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த சக்திவேலை தொடர்ந்து வந்த ஒரு கார் சற்றென்று அவர் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சக்திவேல் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் காரில் வந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, ஊராட்சி மன்ற தலைவரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற  சம்பவம் பரபரப்பாக பரவி வருகிறது. அவரது உறவினர்களும், ஊர் பொதுமக்களும் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

அவர்களிடம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arasapillaipatti president attempt murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->