28-ம் தேதி வரை சம்பவம் இருக்கு! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த அதன் அறிவிப்பில்,

வளிமண்டல நிலை:
வடக்கு உள் கர்நாடகாவிலிருந்து தென் தமிழகத்திற்கு நீளும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை நீடிக்கும் மாவட்டங்கள்:
கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை நீடிக்கும் கால அளவு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 28 வரை லேசானது முதல் மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் வானிலை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை:
சென்னையில் மதியம் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு அருகில் இருக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai IMD Tamilnadu Rain Alert 22 match 2025


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->